நாட்டில் முதல் மாநிலமாக ஜிஎஸ்டி மசோதாவுக்கு அசாம் சட்டப்பேரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர் பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு அசாம் சட்டப்பேரவை நேற்று ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை அசாம் பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த ஜிஎஸ்டி மசோதா கடந்த ஆண்டு மே மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் மசோதாவை நிறைவேற்ற முடிய வில்லை.

இதைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று மசோதாவில் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 3-ம் தேதி ஜிஎஸ்டி சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறை வேற்றப்பட்டது. கடந்த 8-ம் தேதி மக்களவையிலும் மசோதா நிறை வேறியது.

இந்த சட்டத் திருத்த மசோதா சட்டமாவதற்கு குறைந்தபட்சம் 15 மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட வேண்டும். அதன்படி நாட்டில் முதல் மாநிலமாக பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் ஜிஎஸ்டி சட்டத் திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவை ஒப்புதல் அளித் தவுடன் சபாநாயகர் ரஞ்சித் குமார் தாஸும் நிதியமைச்சர் ஹிமந்தா விஸ்வ சர்மாவும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

முதல்வர் சர்வானந்த சோனோவால் பேசியபோது, நாட்டில் முதல் மாநில மாக ஜிஎஸ்டி சட்டத் திருத்த மசோதாவுக்கு அசாம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

பிரேசில், கனடா வரிசையில்

நிதியமைச்சர் சர்மா பேசியபோது, பலமுனை வரிவசூல் நடைமுறைக்குப் பதிலாக ஒருமுனை வரிவசூல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த நடைமுறையில் பிரேசில், கனடா வரிசையில் மூன்றாவது நாடாக இந்தியா இணைய உள்ளது என்று தெரிவித்தார்.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் சட்டத் திருத்த மசோதா நிறைவேறிய பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்குவார். இந்த கவுன்சில்தான் புதிய வரி விகிதத்தை யும் இதர பிரச்சினைகளையும் கையாளும். ஜிஎஸ்டி வரிவிதிப்பை அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

க்ரைம்

58 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்