எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது

By பிடிஐ

எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

49 ஆண்டுகள் பழமையான எதிரி சொத்து சட்டத்தை (1968) திருத்த வகை செய்யும் எதிரி சொத்து (திருத்தம் மற்றும் சரிபார்த்தல்) மசோதா 2016 கடந்த ஆண்டு மக்களவையில் நிறைவேறியது. ஆனால் மாநிலங்களவை இந்த மசோதாவை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது.

அதன் பரிந்துரை அடிப்படையில் சில திருத்தங்களை செய்து மாநிலங்களவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், திருத்தங்களுடன் கூடிய இந்த மசோதா மக்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-சீனா போருக்குப் பிறகு, இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டினர் பலர் தங்கள் நாடுகளில் குடியேறி விட்டனர். அவர்கள் இந்தியாவில் விட்டுச்சென்ற சொத்துகள் ‘எதிரி சொத்துகள்’ என அழைக்கப்படுகிறது.

இந்த சொத்துகளை ஒழுங்குபடுத்தவும், அவற்றை பராமரிப்போருக்கான அதிகாரங்களை வரையறுக்கவும் எதிரி சொத்து சட்டம் 1968–ஐ இயற்றிய மத்திய அரசு, இதற்காக அலுவலகம் ஒன்றையும் நிறுவியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

கருத்துப் பேழை

40 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்