காங்கிரஸ் சமூகவலைதள பிரிவு தலைவராக நடிகை ரம்யா நியமனம்

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவராக நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ரம்யா நியமிக்கப் பட்டுள்ளார்.

தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங் களில் நடித்து வந்த நடிகை ரம்யா கடந்த 2012-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். 2013-ல் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் மண்டியா மக்களவைத் தொகுதி யில் வென்ற அவர், 2014-ல் அதே தொகுதியில் தோல்வி அடைந்தார். இதனால் அண்மை காலமாக கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருந்தார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவைப் போல ரம்யாவும் பாஜகவில் இணைய போவதாக அண்மையில் தகவல் வெளியானது. இதை மறுத்த ரம்யா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக மாட்டேன் என தெரிவித்து வந்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவு தலைவராக ரம்யாவை கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று நியமித்தார். முன்னதாக எம்.பி. தீபேந்தர் சிங் ஹூடா இப்பொறுப்பு வகித்தார்.

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

தேர்தலையொட்டி எதிர்க் கட்சிகளை விமர்சித்தும், காங்கிரஸ் ஆட்சியின் நலத் திட்டங்களை விவரித்தும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவும் ரம்யா திட்ட மிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்