காவிரி பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜெ.க்கு தாம்பூலம் அனுப்பிய கர்நாடக பாஜக

By இரா.வினோத்

காவிரி பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன் வருமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடகத்தின் மண்டியா மாவட்ட பாஜக இளைஞர் அணியினர் பாரம்பரிய முறையிலான அழைப்பை அனுப்பி யுள்ளனர்.

வரலக்ஷ்மி பூஜையை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை தமிழக முதல்வருக்கு 'பாகினி' (தாம்பூலம்) பூஜைப் பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பினர். இந்த தாம்பூலத்தில் பச்சை நிற பட்டுப்புடவை, 2 முரம், பச்சை நிற வளையல், மஞ்சள் தூள், குங்குமம், வெற்றிலைப் பாக்கு, நவதானியங்கள் வைக்கப்பட் டுள்ளன.

இதுதொடர்பாக மண்டியா மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் சி.டி.மஞ்சுநாத் கூறும்போது, “மண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை கிராமம்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பூர்வீகம். கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே பல தலைமுறைகளாக காவிரி நதி நீர் பிரச்சினை நிலவுகிறது. பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர தமிழக முதல்வருக்கு பாரம்பரிய முறைப்படி அழைப்பு விடுத்துள்ளோம். நாங்கள் அனுப்பிய பாகினி (தாம் பூலம்) பார்சல் நேற்று மாலை ஜெயலலிதாவின் போயஸ் தோட் டத்தில் சேர்ந்துவிட்டதாக குறுந் தகவல் கிடைத்துள்ளது. எங்களது அழைப்பை ஜெயலலிதா ஏற்றுக் கொள்வார் என நம்புகிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்