காஷ்மீரில் நடப்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல இந்தியாவுக்கு எதிரான மறைமுகப் போர்: துணை முதல்வர் நிர்மல் சிங் விளக்கம்

By பிடிஐ

‘காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதல்களை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதிவிட முடியாது. இது, இந்தியாவுக்கு எதிராக, எல்லைக்கு அப்பாலிருந்து நடத்தப்படும் மறைமுகப் போர்’ என்று, காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் நடை பெற்றுக் கொண்டிருக்கும் காஷ்மீர் சட்டப்பேரவையில், தீவிர வாத ஊடுருவல் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். எதிர்க் கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா பேசும்போது,

‘காஷ்மீரில் ஊடுருவல் குறித்து ஊடகங்கள் வாயிலாகவே நாங்கள் தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மாநில அரசு தொடர்ந்து மவுனம் சாதித்துவரு கிறது. முதல்வர் மெஹபூபா முப்தி பேரவைக்கு எப்போதாவது வருகிறார்.

கேள்விநேரத்தில் அவராக ஒரு கேள்வியை தேர்வு செய்து, பதில் அளித்துவிட்டு சென்றுவிடுகிறார். முதலில் அவரை பேரவைக்கு வரச்சொல்லுங்கள். இதுகுறித்து அறிக்கை வெளியிடச் சொல்லுங் கள்’ என்றார்.

தேசிய மாநாட்டுக்கட்சி எம்எல்ஏக்கள் அலி முகமது சாகர், தேவேந்தர் ராணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ எம்.ஒய்.தாரிகாமி உள்ளிட்டோரும், மாநில அரசு மவுனத்தை கலைக்க வேண்டும் எனக் கூறினர்.

இதைத்தொடர்ந்து பேசிய துணை முதல்வர் நிர்மல் சிங், ‘காஷ்மீரில் நடப்பதை வெறு மனே சட்டம் ஒழுங்கு பிரச்சினை யாகக் கருதிவிட முடியாது. இது, எல்லைக்கு அப்பாலிருந்து தொடுக்கப்படும் மறைமுகப் போர்.

இவ்விஷயத்தில் மத்திய அரசுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். இதுகுறித்து, வியாழன்கிழமை அன்று (இன்று) விரிவான அறிக்கையை மாநில அரசு வெளியிடும்’ என்றார்.

காஷ்மீரில் கடந்த 6 மாதங் களில் தீவிரவாதிகளுடன் நிகழ்ந்த மோதல்களில், 24-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பலியா கினர். 70 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். அண்மைக் காலமாக, காஷ்மீரில் உள்ள பாது காப்புப் படையினர் வாகனங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன

பொதுவாக கோடைக்காலத் தில் தீவிரவாதிகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் காஷ்மீரில் அதிகமாக இருக்கும். இதேகாலகட்டத்தில் கடந்த ஆண்டு களை ஒப்பிடும்போது, 2016-ல் தீவிரவாத தாக்குதல் அதிகரித் திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

வணிகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்