ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் செல்லுபடியாகாது: சோலி சொராப்ஜி கருத்து

By பிடிஐ

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தால் அது, அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகாது என, முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கூறியுள்ளார்.

தொலைக்காட்சி விவாதங்களில் இதுகுறித்து அவர் குறிப்பிடும்போது, 'ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து தீர்வு காண மத்திய அரசு விரும்புகிறது. அது நல்லது தான். ஆனால், இதுபோன்ற சூழல்களில் அவசரச் சட்டம் தேவையற்றது.

நெருக்கடியான காலகட்டத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால் மட்டுமே அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வரும் அவசரச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் படி செல்லுபடியாகும் என நான் நினைக்கவில்லை. எனினும், என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்' என்றார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் குறித்து அவர் கூறும்போது, 'நாட்டின் அடிப்படை சட்ட விதிகளை மீறி, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. போராட்டக்காரர்களுடன் தலைவர்கள் பேசவேண்டும்' என்றார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்