பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்ணுக்கு குறைந்தபட்ச இழப்பீடு ரூ.4 லட்சம்: பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் ஒரு மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இத னால் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், நிபுன் சக்சேனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், பலாத்காரத்தால் பாதிக்கப் படும் பெண்களுக்கு நிர்பயா திட்டத்தின் கீழ் உடனடியாக இழப் பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா மற்றும் எஸ்.அப்துல் நசீர் அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் நீதிமன்றத் துக்கு உதவுவதற்காக மூத்த வழக் கறிஞர் இந்திரா ஜெய்சிங் நிய மிக்கப்பட்டார். விசாரணையின் போது, பலாத்காரத்தால் பாதிக் கப்படுவோருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு குறித்த தேசிய சட்ட சேவைகள் ஆணை யத்தின் (என்ஏஎல்எஸ்ஏ) பரிந் துரையை அவர் சுட்டிக் காட்டிக் காட்டி இருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்த னர். அதில், “பாலியல் பலாத்காரத் தால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக இந்திரா ஜெய்சிங் தாக்கல் செய் துள்ள திட்டம் மற்றும் வழிமுறைகள் அக்டோபர் 2 முதல் அமலுக்கு வரும்.

குறிப்பாக, குற்றவாளிக்கு தண் டனை வழங்குவதுடன், பாதிக்கப் பட்ட பெண்களுக்கு என்ஏஎல்எஸ்ஏ பரிந்துரைப்படி குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கு மாறு விசாரணை நீதிமன்றம் உத்தரவிடலாம். அதேநேரம் இதற்கு உச்சவரம்பு இல்லை. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.

இந்த வழிமுறைகள் பற்றி தூர்தர்ஷன் மற்றும் வானொலி மூலம் விளம்பரம் கொடுக்க அனைத்து உயர் நீதிமன்றங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

4 mins ago

சினிமா

9 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்