வங்கியில் வாராக்கடன் அதிகரிப்புக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்: பிரதமர் மோடி தாக்கு

By பிடிஐ

வங்கியில் வாராக்கடன் அதிகரிப்புக்கு காங்கிரஸ் கட்சி தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்கு கடன் கொடுக்க பரிந்துரை செய்ததே காரணம் என்று பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டுக் கூறியுள்ளார்.

இந்திய அஞ்சல் துறையின் `போஸ்ட் பேமென்ட் வங்கி’யை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 650 கிளைகளில் , 3,250 மையங்களில் இந்த போஸ்டல் பேமெண்ட் வங்கி செயல்படும். அதிகபட்சமாக ஒருலட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்து எடுக்கலாம். பணம் அனுப்புவது, சேமிப்பு கணக்கு தொடங்குவது, தொலைப்பேசி கட்டணம், மின்கட்டணம் செலுத்தும் சேவைகள் அளிக்கப்படும். கணக்கு தொடங்குபவர்களுக்கு ஏடிஎம் கார்டுகளும் வழங்கப்படும். மூன்றாம் நபர்களுக்கும், வேறு வங்கிகளுக்கும் இங்கிருந்து பணம் அனுப்பவும் முடியும். சிறு,குறுந்தொழில் செய்பவர்கள் நடப்பு கணக்கும் தொடங்க முடியும்.

வங்கிச் சேவைக்காக அஞ்சல் துறையில் உள்ள 3 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் கருவிகள், கையடக்க கருவிகளை இவர் கள் கையாளுவர். வாடிக்கை யாளர்களின் வீடுகளுக்குச் சென்று வங்கிச் சேவைகளை அளிக்க உள்ளனர்.

இந்திய போஸ்டல் பேமெண்ட் வங்கியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டில் வங்கிகளில் வாராக்கடன் கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கட்டணி ஆட்சியில்தான் அதிகரித்தது. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருப்பவர்கள், தங்களுக்கு நெருக்கமாக இருக்கும் தொழிலதிபர்களுக்கு கடன் கொடுக்க பரிந்துரை செய்தனர். இதன் காரணமாகவே வாராக்கடன் வங்கிகளில் அதிகரித்தது.

எங்கள் ஆட்சியில் வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் 12 தொழிலதிபர்கள் மூலம் வாராக்கடன் ரூ.175 கோடி. கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களிடம் இருந்து ஒவ்வொரு பைசாவையும் வசூலிக்காமல் விடமாட்டேன். இது மட்டும் தற்போதுள்ள பாஜக ஆட்சியில் கடன் வழங்கப்பட்டது.

ஆனால், கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் வாராக்கடன்கள் அளவு மிகப்பெரிய அளவுக்கு அதிகரித்தது. அதை உணர்ந்துதான் நாங்கள் கடினமான சட்டங்களைக் கொண்டு வந்து, கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஏறக்குறைய ரூ.2 லட்சம் கோடி முதல் ரூ.2.50 லட்சம் கோடிவரை கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும்போது, பொதுத்துறை வங்கிகள் மிகவும் நலிவுற்று இருந்தன. கடந்த 60 ஆண்டுகளாக வங்கியில் கடன் என்பது ரூ.18 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு முதல் கடந்த 2014-ம் ஆண்டுக்குள் ரூ.52 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது.

பெரும் தொழிலதிபர்களுக்கு கடன் வழங்கும்போது, எந்தவிதமான சட்டங்களையும், விதிகளையும் பின்பற்றாமல் ஒதுக்கிவைத்துவிட்டு கடன் கொ டுக்கப்பட்டு இருக்கிறது.கடன் மறுசீரமைப்பு என்ற பெயரில் மேலும் கூடுதலாக காங்கிரஸ் ஆட்சியில் கடன் தரப்பட்டது.

இந்த வங்கிக்கடன் எப்படிக் கொடுக்கப்பட்டன. பரம்பரையாக ஆட்சி நடத்துபவர்கள் ஒரு தொலைப்பேசி அழைப்பு மூலம் பெரிய பணக்காரர்களுக்குக் கடன் வழங்கச் சிபாரிசு செய்தனர். தொலைபைசி மூலம் வங்கிச்சேவை செய்த காங்கிரஸும், பரம்பரைத் தலைவர்களும்தான் நாட்டின் மோசமான நிலைக்குக் காரணம். கடன்கொடுத்தால் திரும்பிவராது என்று தெரிந்து இருந்தும் அவர்களுக்குக் கடன் கொடுத்தனர்.

நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்த பரம்பரை ஆட்சியாளர்களிடம் இருந்து நாங்கள் ஆட்சியைச் சிறப்பாக நடத்தி வருகிறோம். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவீதம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளோம். இது இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் செல்வதைத்தான் காட்டுகிறது. உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை இந்தியா பெற்று, வேகமாக ஏழ்மையை ஒழித்து வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளஇல் முத்ரா திட்டத்தின் மூலம் ரூ.13 ஆயிரம் கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. 32 கோடி ஜன்தன் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன, 21 கோடி ஏழைமக்கள் காப்பீட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்