ஒரே நேரத்தில் தேர்தல்: வாக்குப் பதிவு, விவிபாட் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ரூ.4555 கோடி தேவை- மத்திய சட்ட ஆணையத்தின் வரைவு அறிக்கையில் தகவல்

By பிடிஐ

நாட்டில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டு மெனில் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் கருவிகள் வாங்க ரூ.4,555 கோடி தேவை என்று சட்ட ஆணையம் கூறியுள்ளது.

மக்களவைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த சட்ட ஆணை யத்தின் வரைவு அறிக்கை கடந்த வாரம் வெளியானது. அதில் கூறியிருப்பதாவது:

2019-ம் ஆண்டு பொதுத் தேர் தலுக்கு சுமார் 10,60,000 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறு கிறது. மக்களவைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதாக இருந்தால், 12.9 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 9.4 லட்சம் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 12.3 லட்சம் விவிபாட் கருவிகள் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறிய ஒப்புகைச்சீட்டு வழங்கும் கருவி கள்) பற்றாக்குறை ஏற்படும் எனவும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது வாக்கை பதிவு செய்யும் கருவி, கட்டுப்பாட்டு கருவி, விவிபாட் கருவி என 3 பகுதிகளைக் கொண்டது. இந்த மூன்றையும் சேர்த்து 1 வாக்குப் பதிவு இயந்திரத்தின் விலை சுமார் ரூ.33,200 ஆகும். இதன் அடிப் படையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க ரூ.4,555 கோடி தேவைப்படும்.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத் தின் ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகளாகும். இதை கவனத்தில் கொண்டால், புதிய இயந்திரங்கள் வாங்க (தற்போதைய விலையின் அடிப்படையில்) 2024-ல் 2-வது ஒரே நேர தேர்தலுக்கு ரூ.1751.17 கோடி தேவைப்படும். 2029-ல் 3-வது ஒரே நேர தேர்தலுக்கு ரூ.2017.93 கோடியும் பிறகு 2034-ல் 4-வது ஒரே நேர தேர்தலுக்கு ரூ.13,981 கோடியும் தேவைப்படும்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் போது ஒவ்வொரு வாக்குச் சாவடி களுக்கும் கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் எழுதுபொருள் செலவு தவிர வேறு செலவு ஏற்படாது. மிகப் பெரிய வாக்குச் சாவடிகளுக்கு மட்டும் கூடுதல் பணியாளர்கள் தேவைப்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு சட்ட ஆணையம் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

15 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்