திரிபுரா முதல்வரை கொல்ல சதி

By பிடிஐ

பாஜக மூத்த தலைவரும், திரிபுரா முன்னாள் அமைச்சருமான ரத்தன் சக்கரவர்த்தி, அகர்தலாவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

திரிபுராவில் முதல்வர் விப்லவ் குமார் தேவ் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த கடந்த 6 மாதங்களில் மட்டும், சுமார் 50 ஆயிரம் கிலோ எடைகொண்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மியான்மர் நாட்டிலிருந்துதான், இங்கு போதைப்பொருட்கள் அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன. எனவே, திரிபுராவை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விப்லவ் குமார் அண்மையில் அறிவித்திருந்தார்.

முதல்வர் விப்லப் குமாரின் இத்தகைய செயல்களால் ஆத்திரமடைந்துள்ள மியான்மர் நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உளவுத்துறையினர் அண்மையில் தெரிவித்துள்ளனர். எனவே, முதல்வரின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

24 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்