டீ, காபி விலையை உயர்த்த ரயில்வே துறை முடிவு

By பிடிஐ

ரயில்களில், ரயில்வே நிலையங்களில் விற்பனை செய்யப்படும் டீ, காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வே துறை வாரியம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, 150 மில்லி அளவு கொண்ட டீபேக் கொண்ட தேநீரும், 170 மில்லி அளவு கொண்ட காபியும் 7 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது. அதேசமயம், ரெடிமேட் ஸ்டான்டர்ட் தேநீர் வழக்கம் போல் ரூ.5 விலையில் தொடர்ந்து விற்பனையாகும் எனக் கடந்த 18-ம் தேதி ரயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''லைசென்ஸ் கட்டணத்தை மாற்றியமைக்க ஐஆர்சிடிசி நிறுவனத்துக்கு ரயில்வே வாரியம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அதற்கு ஏற்றார்போல், ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் விற்பனையாகும் டீ, காபி, குளிர்பானங்கள், தண்ணீர் ஆகியவற்றின் விலையையும் உயர்த்திக்கொள்ளும்படி கேட்டிருந்தது.

தற்போது 350-க்கும் மேற்பட்ட ரயில்களில் சமையற்கூடம் வசதி இருக்கிறது. அந்த ரயில்கள் அனைத்திலும் உணவுப் பொருட்களின் விலை மாற்றப்பட உள்ளது. அதேசமயம், ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் எந்த மாற்றமும் இருக்காது.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி மாற்றியமைத்த விலைப்பட்டியலுக்கு ரயில்வே வாரியம் அனுமதியளித்துள்ளது, இந்த விலை உயர்வு மிகவும் குறைவானது.

அதேசமயம் ரயில்களில் பெரிய கோப்பையில் கொண்டு வந்து தேநீர் வழங்கும் பாட்சிஸ்டம் முறை ரத்து செய்யப்படுகிறது. 285 மில்லி அளவு கொண்ட தேநீர் ரூ.10க்கும், 285 மில்லி அளவு கொண்ட இரு காபி ரூ.15க்கும் விற்பனையானது. இந்த முறை ரத்து செய்யப்படுகிறது'' எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்