மைசூரு தசரா திருவிழா அக்டோபர் 10-ல் தொடக்கம்

By இரா.வினோத்

மைசூரு உடையார் சாம்ராஜ்ஜிய மன்னர்களால் கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய தசமி பண்டிகையின்போது, தசரா திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அரசு விழாவாக தசரா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு, வரும் அக்டோபர் 10-ம் தேதி தொடங்கும் தசரா விழா 19-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முதல்கட்ட ஆலோ சனை கூட்டம், முதல்வர் குமார சாமி தலைமையில் நேற்று மைசூருவில் நடந்தது. இதில், மைசூரு பொறுப்பு அமைச்சர் சா.ரா.மகேஷ், மைசூரு மன்னர் குடும்பத்தினர், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். அப் போது, இந்த ஆண்டு, மழை வெள்ளத்தால் குடகு மாவட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள தால் தசரா விழாவை எளிமை யாக கொண்டாட முடிவு செய்யப் பட்டது. அதேபோல், இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் ரூ.100 கோடி வரை நிதி திரட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், நிகழாண்டின் தசரா திருவிழாவைத் தொடங்கி வைக்க எழுத்தாளரும், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட் டது. இதையடுத்து, அக்டோபர் 10-ம் தேதி, மைசூரு சாமுண்டீஸ் வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து சுதா நாராயண மூர்த்தி, தசரா திருவிழாவைத் தொடங்கி வைக்க இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

க்ரைம்

49 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்