‘பொய் சொல்வதை நிறுத்துங்கள் மோடி, ஜேட்லி’; ராகுல் காந்தி சாடல்

By ஐஏஎன்எஸ்

 

ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் அருண் ஜேட்லியும், பிரதமர் மோடியும் பொய்சொல்வதை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

பிரான்ஸ் நிறுவனத்துடன் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க டசால்ட் நிறுவனத்துடன் போடப்பட்டஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. ரபேல் போர்விமான தயாரிப்பை மத்திய அரசின் ஹெச்யுஎல் நிறுவனத்துக்கு வழங்காமல் அனில் அம்பானியின்ரிலையன்ஸ் டிபென்ஸ் வழங்கியது குறித்தும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வந்தது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே, இந்திய அரசு கூறியதால், ரிலையன்ஸ்நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்தோம் என்று பிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். இந்தவிவகாரம் பெரும் கொந்தளிப்பையும், மத்திய அரசுக்கு பெரும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும், ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் செய்தார் என்று காங்கிரஸ்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகளும் கடுமையாக மத்திய அரசை விமர்சித்தன.

இந்நிலையில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளவிளக்கத்தில், பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஹோலண்டே முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகிறார். டசாலட் நிறுவனமே ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தது என்று நீண்ட விளக்கம் அளித்தார்.

இதற்குப் பதில் அளித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்அவர் கூறுகையில், போலியான தார்மீக உணர்வு மற்றும் மறைக்க முடியாததை மறைப்பதற்கான கோபம், ஆகியவற்றுடன் இரு உண்மைகள் அல்லது பொய்களை திரித்துக் கூறுவதுதான் அருண்ஜேட்”லை”(jetlie)யின் சிறப்பும், திறமையும்.

அருண் ஜேட்லி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நம்முடைய பிரதமர் ஆகியோர் பொய்சொல்வதை நிறுத்திவிட்டு, நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, ரபேல் ஒப்பந்தில் உள்ளகறைபடியாத உண்மைகளைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

5 hours ago

மேலும்