காஷ்மீர் மலைச் சாலையிலிருந்து ஆற்றுப்பள்ளத்தில் தவறி விழுந்து வேன் விபத்து: 17 பேர் உயிரிழப்பு

By ஐஏஎன்எஸ்

காஷ்மீர் மலைச் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் அதிகம் பேரை ஏற்றிச் சென்றதால் சாலையிலிருந்து விலகி ஆற்றுப் பள்ளத்தில் விழுந்தது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் தக்ராய் பகுதியில் செனாப் ஆற்றின் குறுக்கே இன்று காலை மெட்டாடர் வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

இதில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்  காலை 9 மணி அளவில் ஆற்றுப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று காலையிலிருந்து தொடங்கி பெரிய அளவில் நடைபெற்றது. மீட்கப்பட்டவர்கள் ஜம்மு நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கவலைக்கிடமான நிலையில் இருந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும், இதில் மேலும் 5 பேர் பின்னர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. இவ்விபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்