திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடக்கம்: 17-ம் தேதி கருடசேவை

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம் மோற்சவ விழா இன்று கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று கோயிலில் ஆகம சாஸ்திரங்களின்படி அங்குரார்hdபண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று மாலை 4 மணியளவில் கோயிலில் உள்ள தங்கkd கொடி மரத்தில் கருட சின்னம் பொறித்த பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது.

இதனை தொடர்ந்து, ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார். வரும் 17-ம் தேதி கருட சேவை நடைபெற உள்ளது.

முன்னதாக, நேற்று காலை திருமலையில் வராக சுவாமி ஜெயந்தி விழா கொண்டாடப் பட்டது. வராக சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், கலச பூஜைகள் நடந்தன. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி நிவாச ராஜு மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

3000 போலீஸ் பாதுகாப்பு

பிரம்மோற்சவத்தை முன் னிட்டு, ஏழுமலையான் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் மற்றும் திருமலை முழுவதும் 3,000-க்கும் மேற் பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்