உத்தரபிரதேசத்தில் ஒரே நாள் மழைக்கு 12 பேர் பலி

By பிடிஐ

உத்தரபிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் மழைக்கு ஒரே நாளில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 14 பேர் படுகாயமடைந் துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் மீரட், மிர்ஸாபூர், சீதாபூர், கோண்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், மழையுடன் பலத்த சூறைக்காற்றும் வீசுவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. 200-க்கும் மேற்பட்ட சிறிய வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

இந்நிலையில், மழை வெள்ளம், வீடு இடிந்து விழுந்தது, மின்னல் தாக்கியது போன்ற சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, அம்மாநிலத்தில் இன்னும் மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்