மிகப்பெரிய மாற்றம்: 3 முக்கிய வங்கிகளை இணைக்க முடிவு; அருண் ஜேட்லி அறிவிப்பு

By பிடிஐ

கடன் வசதிகளை அதிகப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை விரைவில் இணைக்கப்பட உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடன் மகிளா வங்கி உள்ளிட்ட 5 துணைவங்கிகள் இணைக்கப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக இப்போது, இந்த மூன்று வங்கிகள் இணைக்கப்பட உள்ளன. இந்த இணைப்பின் மூலம் நாட்டினஅ 3-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவெடுக்கும்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி ஆகிய அரசு வங்கிகளை ஒன்றாக இணைப்பதன் மூலம், வங்கிகள் இன்னும் வலிமை பெற்று, நிலைத்தன்மையுடன் செயலாற்றி, மக்களுக்கு அதிகமான கடன்களை வழங்கும் ஸ்திரத்தன்மை பெறும்.

தற்போது வங்களின் கடன் அளிக்கும் வசதி மிகவும் மோசமாக இருக்கிறது, இதனால், கார்ப்பரேட் துறை முதலீடு பாதிக்கிறது. அதிகமான வராக்கடனை அளித்து வங்கிகளின் சொத்துக்கள் குறைந்து வருகின்றன. இந்த மூன்று வங்கிகளையும் இணைப்பதன் மூலம் வங்கிச் செயல்பாடுகள் வலுப்பெறும்.

இந்த இணைப்பு மூலம் இந்த 3 வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எந்தவிதமான பாதிப்பும்,குறைபாடும் ஏற்படாது. பெரும்பாலான பங்குகள் அரசின் கைவசமே இருக்கும் எனத் தெரிவித்தார்.

நிதிச்சேவை செயலாளர் ராஜீவ் குமார் கூறுகையில், இந்த 3 வங்கிகளின் இணைப்பு குறித்து வங்கிகளின் வாரியம் ஆய்வு செய்யும். இந்த வங்கிகள் இணைப்பு மூலம், வங்கிகளின் செயல்பாடுகள் சிறப்பாகும், சேவைகளைத் திறமையை வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 secs ago

தமிழகம்

44 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்