வெளிநாட்டவர் என தவறுதலாக அடைத்து வைக்கப்பட்ட  59 வயது மாற்றுத் திறனாளிப் பெண் 3 ஆண்டுகளுக்குப்பின் அசாம் முகாமில் இருந்து விடுவிப்பு

By பிடிஐ

தவறுதலாக வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று பிடித்துச் செல்லப்பட்டு, அசாமில் தடுப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்ட 59வயதுப் பெண், 3 ஆண்டுகளுக்குப்பின் அவர் இந்தியர் எனத் தெரிந்ததும் விடுவிக்கப்பட்டார்.

தவறுதலாக பிடித்துவந்துவிட்டோம் என்று போலீஸார் 3 ஆண்டுகளுக்குப்பின் உணர்ந்து, எந்தவிதமான வருத்தமும் இன்றி இப்போது விடுவித்துள்ளனர். எந்தவிதமான காரணமும்இன்றி, தவறும் இன்றி இந்தியாவைச் சேர்ந்த 59வயதுப் பெண் முகாம் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மதுபாலா மண்டல் என்ற 59 வயதுப் விதவைப் பெண்ணைத்தான் போலீஸார் தவறுதலாக கைது செய்து அசாமில் உள்ள கோக்ராஜ்ஹர் முகாமில் அடைத்து வைத்துள்ளனர். காதுகேளாத அந்த பெண் கடந்த 3 ஆண்டுகளாக தனது நிலையை வெளிப்படுத்த முடியாமல் அடைபட்டுக்கிடந்துள்ளார்

இதுகுறித்து சிரங் மாவட்ட போலீஸ் எஸ்பி, சுதாகார் சிங் கூறியதாவது:

சிராங் மாவட்டம், பிஷ்னுபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதுபாலா தாஸ். இவர் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியிருந்து வருகிறார் என்பதால் இவரை கைது செய்து அழைத்துவரும்படி போலீஸாருக்கு கடந்த 2016-ம்ஆண்டு வெளிநாட்டு தீர்பாயம் உத்தரவிட்டது.

ஆனால், மதுபாலா தாஸ், அவரின் கணவர்  மகான் நாம் தாஸ் இருவரும் தீர்ப்பாயம் உத்தரவிடுவதற்கு முன்பே காலமாகிவிட்டார்கள். ஆனால், தீர்ப்பாயம் உத்தரவை எடுத்துக் கொண்டுஅங்கு சென்ற போலீஸார் அந்த கிராமத்தைச் சேர்ந்த மதுபாலா மண்டல் என்ற காதுகேளாத மாற்றுத்திறனாளி பெண்ணை கைது செய்து, இவர்தான் மதுபாலா தாஸ் என்று தீர்பாபயத்தின் முன் நிறுத்தினர்.

தீர்ப்பாயமும், கடந்த 2016-ம் ஆண்டு மதுபாலா மண்டலை வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற முத்திரையில், முகாமில் அடைக்க உத்தரவிட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மதுபாலா தாஸ் என்ற பெயரில் மதுபாலா மண்டல் முகாமில் இருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் மதுபாலா மண்டல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்து, தங்களின் தாய் மதுபாலா மண்டல் முகாமில் கடந்த 3ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுக்கக் கோரி புகார்வந்தது. இந்த புகார் குறித்து விசாரித்த குழுவினர், ம் விசாரணை நடத்தியதில், மதுபாலா தாஸ் இறந்துவிட்டார், மதுபாலா மண்டலைத்தான் போலீஸார் தவறுதலாக மதுபாலா தாஸ் என கைது செய்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக போலீஸ் தலைமையகத்துக்கு இந்த தகவலைத் தெரிவித்து, சிராங்கில் உள்ள வெளிநாட்டு தீர்ப்பாயத்திலும் தகவல் அளித்து உத்தரவிடக் கோரினோம். இதையடுத்து, கடந்த 25-ம் தேதி மதுபாலா மண்டலை விடுவிக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

தீர்ப்பாய் மதுபாலா தாஸை கைது செய்து வர உத்தரவிட்ட நிலையில், போலீஸார், தவறுதலாக மதுபாலா மண்டலை கைது செய்துவந்ததால் 3 ஆண்டுகளாக முகாமில் அடைக்கப்பட்டு இருந்தார் " . இவ்வாறு போலீஸ் எஸ்பி  தெரிவித்தார்.

கடந்த மே மாதம் கார்கில் போரில் பங்கேற்ற ராணுவ அதிகாரி முகமது சனானுல்லாவை இதுபோல் வெளிநாட்டைச் சேர்ந்தவர் எனக் கூறி கைது செய்த போலீஸார், அவரை கோல்பரா மாவட்ட முகாமில் அடைத்துவைத்தன்ர. தீர்ப்பாயமும் அவரை வெளிநாட்டுக்காரர் என்று அறிவித்தது.

இதைத் தொடர்ந்து முகமது சனானுல்லா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குவகாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவை, சனானுல்லாவுகக் ஜாமீன் வழங்கி  நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக ஏதோ ஒரு சட்டத்தைக் காரணம் காட்டி அஸாம் கிராமத்திலிருந்து பெரியவர் ஒருவரை ‘வங்கதேசத்தவர்’ என்று பிடித்துச் சென்று தடுப்புக் காவல் மையத்தில் வைத்து 3 ஆண்டுகள் கழித்து அவர் ‘இந்தியர்தான்’ என்று விடுவித்துள்ளனர்.

மே 7ம் தேதி அசாமில் உள்ள கோல்பரா மத்தியச் சிறையிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாக ரெஹத் அலி என்ற இவர் ஜெயில் அதிகாரியிடம் ’தான் 3 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த தன் ‘காவல் மையத்தை’ப் பற்றி வெளியில் வாய் திறக்க மாட்டென் என்று வாக்குறுதி அளித்தார், அதன் பிறகு விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் மதுபாலா மண்டல் விடுவிக்கப்பட்ட மறுநாள் அசாம் தேசிய குடியேற்ற பதிவேட்டில் இருந்து ஒருலட்சம் மக்கள் நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

34 mins ago

உலகம்

34 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்