யோகா தினத்தைக் கிண்டல் செய்த ராகுல் காந்தி

By செய்திப்பிரிவு

சர்வதேச யோகா தினத்தைக் கிண்டல் செய்யும் தொனியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 5-வது ஆண்டான இன்று (வெள்ளிக்கிழமை) இதய நலனுக்கான யோகாசனம் என்ற கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு யோகா தினம் கொண்டாடப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலம்,  ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடந்த மாபெரும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாடினார்.

மேலும் இந்தியா முழுவதும் நடந்த யோகா நிகழ்ச்சிகளில் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் யோகா தினத்தை விமர்சிக்கும் விதத்தில் 'புதிய இந்தியா' என்று பதிவிட்டு நாய்கள் யோகாசனம் செய்யும் புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவை பாஜக ஆதரவாளர்கள் பலரும் விமர்சித்தனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்