காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 75% பேர் உள்ளூர் இளைஞர்கள்

By செய்திப்பிரிவு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் என்கவுன்ட்டர் தாக்குதல்களின்போது சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 75 சதவீதம் பேர் உள்ளூர் இளைஞர்கள் என்று தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யா பால் மாலிக் கூறும்போது, ''பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளைக் கொல்வதுதான் எங்களின் முதல்பணி என்றாலும், தீவிரவாத இயக்கங்களில் இணைந்ததால், உள்ளூர் இளைஞர்கள் ஏராளமானோரும் கொல்லப்பட்டுள்ளனர்'' என்றார்.

 

நடப்பாண்டில் இதுவரை (5 மாதங்கள்) 23 வெளிநாட்டு தீவிரவாதிகள் உட்பட 101 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக இந்திய ராணுவ உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில், கொல்லப்பட்டவர்களில் உள்ளூர் இளைஞர்களின் எண்ணிக்கை 75 சதவீதம் ஆகும்.

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருக்கும் அதே சமயத்தில், காஷ்மீரில் தீவரவாத இயக்கங்களில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த இருபது ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறையே  போலீஸ் என்கவுன்ட்டரில் வெளிநாட்டுத் தீவிரவாதிகளைக் காட்டிலும் உள்ளூர் இளைஞர்கள், அதிகளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

கடந்த ஆண்டில் காவல்துறை நடத்திய என்கவுன்ட்டர் தாக்குதல்களில் 246 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் 150 பேர், அதாவது 60% பேர் உள்ளூர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்