தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு கேபினட் அந்தஸ்துடன்  5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

தேசிய பாதுகாப்பு ஆலோகராக அஜித் தோவலுக்கு கேபினட் அந்தஸ்துடன் கூடிய 5 ஆண்டுகாலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்தியில் 2014-ம் ஆண்டு பாஜக அரசு பதவியேற்றவுடன். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டார்.

உளவுப் பிரிவு, ராஜதந்திர நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் பெற்ற தோவல், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற, 1968-ம் ஆண்டின் கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.

இந்தியாவின் உளவு அமைப்புகளான ஐபி மற்றும் ‘ரா’வில் வெற்றிகரமாகப் பணியாற்றியவர். பஞ்சாப், மிசோரம் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடங்கி, காந்தகார் விமானக்கடத்தல், புல்வாமா தாக்குதல் என நாடு பல நெருக்கடியான நேரத்தில் அஜித் தோவல் திறம்படப் பணியாற்றி வெற்றியைத் தேடித் தந்தவர்.

கடந்த 5 ஆண்டு காலமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் சிறப்பாகப் பணியாற்றி வரும் அவருக்கு 5 ஆண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு காலமாக அவர் இணையமைச்சருக்கு நிகரான அந்தஸ்துடன் கூடிய பதவியில் இருந்தார். தற்போது மத்திய அமைச்சருக்கு நிகராக கேபினட் அந்தஸ்து அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தோவல் இன்று காலையில் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்