உ.பி, பிஹார் இடைத் தேர்தல்: யோகி, நிதிஷ் குமாருக்கு சவால்

By செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இரண்டு மக்களவை தொகுதிகளுக்கும், பிஹாரில் உள்ள ஒரு மக்களவை தொகுதிக்கும் இன்று காலை தொடங்கி வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பஹல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்களாக இருந்த யோகி ஆதித்ய நாத், கேசவ்பிரசாத் மவுரியா ஆகியோர் முதல்வர், மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றனர். எனவே காலியாக உள்ள இந்த இரு தொகுதிகளுக்கும், பீஹாரில் அரேரியா மக்களவை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதே போன்று பீஹாரில் ஜகனாபாத், பஹாபூவா சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி என்றார்.

இந்த தேர்தல் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் உ.த்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் செல்வாக்கை நிருபிக்கும் தேர்தலாக உள்ளது. பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணியை முறித்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை அமைத்தார நிதிஷ் குமார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

9 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்