தமிழகத்தில் பாஜக நடத்தும் நாடகம் போல், ஆந்திராவில் நடத்த முடியவில்லை: சந்திரபாபு நாயுடு விமர்சனம்

By பிடிஐ

 

தமிழகத்தில் பாஜக நடத்தும் நாடகம் போல், ஆந்திராவில் நடத்த முடியவில்லை என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் விமர்சனம் செய்துள்ளார்.

ஜனசேனா கட்சியின் 4-வது ஆண்டுவிழா நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் பங்கேற்றுப் பேசும்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவரின் மகன் மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின், மாநிலம் முழுவதும் ஊழல் பரவிவிட்டது, தந்தையும், மகனும் கோடிக்கணக்கில் ஊழல் செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுடன் நடந்த வீடியோ கான்பிரன்ஸிங்கில் இன்று பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:

''என் மீது வைக்கப்படும் எந்த விமர்சனமும், குற்றச்சாட்டும் ஆசிர்வாதம் போலவே எனக்கு இருக்கும். ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் என்மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி இருக்கிறார்.

இந்த குற்றசாட்டுகளையும், பேச்சையும், அவர் பேசவில்லை. டெல்லியில் இருந்து பாஜக எழுதிக்கொடுத்த உரையைத்தான் அவர் படித்து இருக்கிறார். பவன் கல்யாணின் அனைத்து குற்றச்சாட்டுகளின்  பின்புலத்தில், பாஜக இருக்கிறது.

தமிழகத்தில் பாஜக நடத்தும் நாடகம் போல் ஆந்திராவில் நடத்த நினைக்கிறது. அதுபோன்ற நாடகத்தை ஆந்திராவில் நடத்த முடியவில்லை.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களுடன் சில 'பெரிய தலைவர்கள்' சேர்ந்து நாடகம் நடத்தினார்கள். ஆனால், அதுதோல்வி அடைந்துவிட்டது, இப்போது புதிய நாடகம் தொடங்கி இருக்கிறது.

இந்த நாடகத்துக்கான திரைக்கதை எங்கிருந்து வந்தது என்று எங்களுக்கு தெரியும், இந்த சதிக்கு பின் ‘மிகப்பெரிய மனிதர்கள்’ இருக்கிறார்கள், ஆந்திராவைப் பொறுத்தவரை எந்தவிதமான நாடகம் நடத்தினாலும், மக்கள் சரியான தீர்ப்பு அளிப்பார்கள்.

என் மீதும் என் மகன் மீதும் சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. இதில் சதி கலந்து இருக்கிறது. மக்கள் இதை புரிந்து கொள்வார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த சதிக்குள் பவன் கல்யாண் சிக்கிவிட்டார்.

மாநிலத்தின் நலனுக்காக நாம் போராடி வரும் நிலையில், இந்த நேரத்தில் யாரும் எந்தவிதமும் உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது. யார் மீதும் தனிப்பட்ட முறையில் எந்தவிதான தாக்குதல்களும், விமர்சனமும் செய்யக்கூடாது.''

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

43 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்