ரிசர்வ் வங்கி அதிரடி: வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்த ஏர்டெல் வங்கிக்கு ரூ. 5 கோடி அபராதம்

By பிடிஐ

 

வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி பேமென்ட் வங்கிக் கணக்கு தொடங்கி, அவர்களுக்கு அரசு மானியத் தொகையை தனது கணக்குக்கு மாற்றி கையாடல் செய்த ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டது.

மேலும், கேஒய்சி விதிமுறைகளையும் பின்பற்றி எந்தவிதமான கணக்குகளும் தொடங்காமல் இருந்த காரணத்தினாலும் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாரதி ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் சிம்கார்டு விற்பனை செய்யும்போது அடையாள அட்டையாக ஆதார் நகலைப் பெற்றது. அப்போது, வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல், அவர்களின் ஒப்புதலின்றி ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கணக்கை தொடங்கியது.

அரசின் மானியத்தொகை எந்தெந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்குகளில் சென்று சேர்கிறதோ அதை, தன்னுடைய பேபெண்ட் வங்கிக்கணக்குஏர்டெல் நிறுவனம் திருப்பிவிட்டது. இதனால், வாடிக்கையாளர்களர் பலர் வங்கிக்கணக்குகளில் மானியத் தொகை சேராதது குறித்து வங்கிகளில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் 23 லட்சம் வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்களுக்கே தெரியாமல் ரூ. 47 கோடியை தனது பேமெண்ட் வங்கிக்கணக்கு ஏர்டெல் நிறுவனம் மாற்றியது தெரியவந்தது. இந்த விஷயம் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியதையடுத்து, சிறிது காலத்துக்கு சிம் கார்டு ஆய்வு செய்யும் பணியை டிராய் நிறுத்திவைத்தது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு புகார் சென்று விசாரணையைத் தொடங்கியது. அந்த விசாரணையின் முடிவில், ஏர்டெல் பேமெண்ட் வங்கிக்கு ரூ. 5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

முன்னதாக ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயல்பட்டதாக இந்த வாரத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு ரூ.40லட்சம், ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.3 கோடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்