நாட்டின் எந்தப் பகுதிக்கும் இடதுசாரிகள் சரியானவர்கள் அல்ல: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கருத்து

By செய்திப்பிரிவு

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் எந்தப் பகுதிக்கும் இடதுசாரிகள் சரியானவர்கள் அல்ல என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் பாஜக பெரும்பான்மை பெற்றாலும் அமைச்சரவையில் கூட்டணிக் கட்சியான திரிபுரா உள்நாட்டு மக்கள் முன்னணிக்கும் இடம் அளிக்கப்படும்.

நாட்டின் மேற்குப் பகுதி நன்கு வளர்ச்சி அடைந்தபோதிலும் கிழக்குப் பகுதிகள் வளர்ச்சி அடையவில்லை என்று கடந்த 2014-ல் நரேந்திர மோடி கூறினார். அவர் உடனடியாக, கிழக்கை நோக்கிய கொள்கையை தொடங்கினார். அவரது கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவே இத்தேர்தல் வெற்றியை கருதுகிறேன். பிரதமரின் கொள்கைக்கு வடகிழக்கில் உள்ள 3 மாநிலங்கள் அங்கீகாரம் அளித்துள்ளன.

பாஜகவுக்கு இது பொற்காலம் என்று கூறுவது சரியல்ல. ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் ஆட்சி அமைக்கும் வரை பாஜகவின் பொற்காலம் தொடங்காது.

இவ்வாறு அமித் ஷா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்