தொண்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக் கூடாது: பெங்களூர் போலீஸாரிடம் அதிமுக மனு

By செய்திப்பிரிவு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராவதற்காக இன்று பெங்களூர் வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை காண்பதற்காக கூடும் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது என பெங்களூர் போலீஸாருக்கு அதிமுகவினர் கோரிக்கை வைத் துள்ளனர்.

கர்நாடக மாநில முன்னாள் அதிமுக செயலாளர் கிருஷ்ணராஜு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் நேற்று பெங்களூர் மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி மற்றும் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஹரிசேகரனை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா 3 ஆண்டுகளுக்குப் பிறகு பெங் களூருக்கு வருகிறார். அவரை உற்சாகமாக வரவேற்கும் வகையில் பழைய விமான நிலையத்திலிருந்து நீதிமன்றம் வரை வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள் கூடுகிறார்கள்.

மேலும் அவ‌ரைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பர‌ப்பன அக்ரஹாரா பகுதியில் கூடுவார்கள். தொண்டர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நின்று அவர்கள் ஜெயலலி தாவை வரவேற்பார்கள். ஜெயலலி தாவின் பாதுகாப்பு பணியில் ஈடுபட் டுள்ள போலீஸாருக்கு உதவி யாக ஆயிரக் கணக்கான அதிமுக நிர்வாகிகளும் பேட்ஜ் அணிந்து தொண்டர்களை கட்டுப்படுத் துவார்கள். எனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் கட்சித் தொண்டர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீஸார், “பாதுகாப்பு பணிக்கு பங்கம் விளைவிக்காமல் போலீஸா ருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு நடந்து கொண்டால் போலீஸார் அவர்களுக்கு எவ்வித இடையூறும் செய்ய மாட்டார்கள்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

கருத்துப் பேழை

2 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்