கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் முக்கியமான குற்றவாளி பிடிபட்டார்

By செய்திப்பிரிவு

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் கே.டி.நவீன்குமார் (37) முக்கியப் பங்காற்றியது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவரை சிறப்பு புலனாய்வுக்குழு கைது செய்தது.

ஒரு மூத்த அதிகாரி அவரை ஒரு 'வலுவான சந்தேகத்திற்குரியவர்' என்று விவரித்தார், அவரது அழைப்புப் பதிவுகள் தீவிரவாத இந்துத்துவா குழுவுடன் அவர் தொடர்புபடுத்தியதை சுட்டிக் காட்டின.

மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் கெம்பகவுடா பேருந்துநிலையம் அருகே பிப்ரவரி 18-ம் தேதி அன்று  மத்திய புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.

அவர், 15 சுற்றுகளின் தோட்டாக்கள் கொண்ட  32 காலிபர் வகை துப்பாக்கியை வைத்திருந்தார். அவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டு, பின்னர் ஆயுத சட்டப்பிரிவு 3 மற்றும் 25க்குக் கீழ் உள்ள பிரிவுகளில் அதிகார வரம்பிற்குட்பட்ட உப்பர்பேட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மத்திய புலனாய்வுக்குழு நவீனை விசாரித்த போது, அவருக்கு நாட்டின் மற்ற பகுதிகளைச் சார்ந்த சில வலது சாரி தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. சிறப்புப் புலனாய்வுக்குழு கர்நாடகாவுக்கு வெளியிலும் இவ்வழக்கில் தொடர்புடைய நான்கு ஆர்வலர்களைத் தேடி வருகிறது.

வெள்ளியன்று சிறப்புப் புலனாய்வுக்குழு உண்மைகளைக் கண்டறிவதற்காக கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அவரை ஏழுநாள் காவலில் எடுத்தது.

கவுரியை கொல்ல பயன்படுத்திய 7.65 காலிபர் வகைத் துப்பாக்கியில் பொருத்தத்தகுந்த தோட்டாக்களைக் கைப்பற்றினர். இத்தோட்டாக்கள் பலவகையான துப்பாக்கிகளிலும் பொருந்தக்கூடிய வடிவம் கொண்டது என்று ஆயுதத் துப்பாக்கி நிபுணர்கள் கூறினர். இதுதவிர அவரது உடைமைகளையும் கைப்பற்றினர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தனது வீட்டுக்கு வெளியே பத்திரிகையாளர் மற்றும் செயற்பாட்டாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்