ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு காஷ்மீரில் சிம் கார்டு

By செய்திப்பிரிவு

காஷ்மீரில் சட்ட விரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் 198 பேர் சொந்தமாக சிம் கார்டு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

காஷ்மீரில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரோஹித் சவுத்ரி என்ற தன்னார்வலர் கோரியிருந்தார். அவருக்கு கிடைத்த தகவல்கள் மூலம் காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு தேசில் பகுதியில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள 27 ரோஹிங்கியா முஸ்லிம் குடும்பங்கள் வசிப்பதும் அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 198 பேர் செல்போன் சிம் கார்டுகளை வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரோஹித் சவுத்ரி அளித்த பேட்டியில், ‘‘சி்ம் கார்டு வேண்டுமென்றால் ஆதார் போன்ற அடையாள அட்டைகள் அவசியம். காஷ்மீரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சிம் கார்டுகள் வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உள்ளூர் மக்களின் ஆதரவுடனோ அல்லது போலியான ஆதாரங்களைக் கொடுத்தோ சிம் கார்டு பெற்றுள்ளனர்.

இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

50 mins ago

கருத்துப் பேழை

34 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

3 hours ago

மேலும்