மேற்குவங்கத்தில் மம்தாவை மிஞ்சும் பாஜக?- இந்தியா டுடே கருத்து கணிப்பு

By செய்திப்பிரிவு

மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளை கைபற்றி மாபெரும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2009- மக்களவைத் தேர்தலில் அந்த கூட்டணி 13 இடங்களை கைபற்றியது. 

2009- மக்களவைத் தேர்தலில் 15 இடங்களி்ல் வெற்றி பெற்ற நிலையில் திரிணாமுல் 34 இடங்களை கைபற்றியது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 39 சதவீத வாக்குகளையும், இடதுசாரி கூட்டணி 30 சதவீத வாக்குகளையும் பெற்றன.

2014-ம் ஆண்டு  தேர்தலில் 17 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக 2 இடங்களில் வென்றது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் பாஜக கணிசமான வளர்ச்சி பெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலி இடதுசாரிக் கூட்டணியை மூன்றாம் இடத்துக்கு தள்ளி பாஜக 2-ம் இடம் பெற்றது. மக்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதே வேகத்துடன் பாஜக, திரிணாமுல் காங்கிரஸூடன் மோதுகிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே அம்மாநிலத்தில் பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸூக்கும் இடையே தொடர்ந்து அடிதடி மோதல்கள் நடந்து வருகின்றன. பிரச்சாரத்தில் பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாஜகவுக்கு இடதுசாரி வாக்குகள்

இடதுசாரிக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள், நிர்வாகிகளை பொறுத்தவரையில் தங்களுக்கு வலிமை இல்லாத தொகுதிகளில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கோரி வருவதாக கூறப்படுகிறது. இதனை இடதுசாரி கட்சிகளின் மாநில நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், கீழ்மட்ட அளவில் இடதுசாரி கட்சி தொண்டர்கள் மத்தியில் பாஜக ஆதரவு போக்கு காணப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் வழக்கமாக இடதுசாரிக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் நடுத்தர வகுப்பு மக்கள் இந்த முறை பெருமளவு பாஜக மீது ஈர்ப்பு காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் மேற்குவங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.  மேற்குவங்க நிலவரம் குறித்து இந்தியா டுடே வெளியிடப்பட்டுள்ள கருத்து கணிப்பு:

 

மொத்த தொகுதி: 42

பாஜக 19- 22

திரிணாமுல் காங்கிரஸ்: 19 -22

காங்கிரஸ் : 1

இடதுசாரி: 0

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 mins ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

14 mins ago

வலைஞர் பக்கம்

54 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்