தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒரு மோசடி: ராகுல் காந்தி தாக்கு

By செய்திப்பிரிவு

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மோசடியாகும் ஆகவே அடுத்த 24 மணிநேரம் முக முக்கியமானது கட்சித் தொண்டர்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

“அடுத்த 24 மணி நேரம் மிக முக்கியமானது. விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மோசடித்தனமான பிந்தைய கணிப்புகள் பற்றி ஏமாற்றமடைய வேண்டாம். உங்கள் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்கள் முயற்சிகள் வியர்த்தமாகாது” என்று ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

கடந்த 3 நாட்களாக தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் பற்றி ராகுல் காந்தி எதுவும் கூறாமல் இருந்தார்.  தேஜகூவுக்கு தெளிவான பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பிளான் பி ரெடி என்கின்றனர் காங்கிரஸ் உட்கட்சி வட்டாரங்கள்.

 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தார் இதோடு மற்ற பிராந்தியக் கட்சிகளுடனும் தொடர்பில் எதிர்க்கட்சிகள் இருந்து வருகின்றன.

 

நவீன் பட்நாயக் மற்றும் சந்திரசேகர ராவ் ஆகியோருடன் சரத் பவார் கடந்த 3 நாட்களாக பேச்சில் இருந்து வருகிறார்.

 

மே 23 முடிவுகள் தொங்கு நாடாளுமன்றம் என ஆனால், எதிர்க்கட்சிகளின் ஐக்கிய முன்னணியை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க தெலுங்கு தேசம் கட்சி பேசி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

வலைஞர் பக்கம்

6 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

12 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்