உ.பி.யில் வளர்ச்சி, சமூக நலத்திட்டங்களால் பலனடைந்த பாஜக: சமூக வாக்குகளை நம்பி ஏமாந்த மாயாவதி, அகிலேஷின் மெகா கூட்டணி

By ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யில் சுமார் 22 சதவிகிதம் உள்ள யாதவர் சமூகத்திற்கு ஆதர வான கட்சியாக கருதப்படுவது அகிலேஷின் சமாஜ்வாதி(எஸ்பி) கட்சியாகும். அதேபோல், மாயாவதி யின் பகுஜன் சமாஜ்(பிஎஸ்பி) 22 சதவிகித தலித்துகளுக்கான தாகவும், அஜீத் சிங்கின் ராஷ் டிரிய லோக் தளம்(ஆர்எல்டி) 8 சதவிகிதமுள்ள ஜாட் சமுதா யத்திற்கு ஆதரவாகவும் செயல் பட்டு வருகின்றன. இதேபோல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வகிக்கும் அப்னா தளம் உ.பி.யின் குர்மிகள் சமுதாயத்தின் கட்சியாகவும் உள்ளது.

பாஜகவும் காங்கிரஸும் உயர்சமூகத்தினரான பிராமணர் மற்றும் தாக்கூருக்கானது எனவும் கூறப்படுவது உண்டு. இந்த கட்சிகள் அனைத்தும் அங்குள்ள சமுதாய வாக்குகளை குறிவைத்தே தமது வேட்பாளர்களை நிறுத்துவது உண்டு. இவர்களில் பாஜக தவிர மற்ற கட்சிகள் முஸ்லிம் வாக்கு களையும் குறிவைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியான மக்களவை தேர்தல் முடிவுகளில் உ.பி.யின் சமுதாய வாக்குகள் அவை சார்ந்த கட்சி களுக்கு விழவில்லை எனத் தெரியவந்துள்ளது. இந்த சமுதாய வாக்குகள் தமக்கு விழும் என எதிர்பார்த்தே மாயாவதி, அகிலேஷ் மற்றும் அஜித்சிங் இணைந்து உ.பி.யில் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தனர். இதனால், பிஎஸ்பிக்கு பத்து, எஸ்பிக்கு கடந்த தேர்தலை விட இரண்டு குறைவாக ஐந்தும் கிடைத்துள்ளது.

எஸ்பியின் எம்பிக்களும் அக்கட்சியின் நிறுவன ரான முலாயம்சிங்கின் குடும்பத்தி னருமான தர்மேந்திரா யாதவ் பதான்யூவிலும், அக் ஷய் யாதவ் பெரோஸ்பூரிலும், டிம்பிள் யாதவ் கன்னோஜிலும் தோல்வியுற்றனர். ஆர்எல்டியில் போட்டியிட்ட அதன் தலைவர் அஜீத்சிங் மட்டும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அவரது மகனும் கட்சியின் துணைத் தலைவ ருமான ஜெயந்த் சவுத்ரி பாக்பத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.

இந்தமுறை வழக்கம்போல் அன்றி சமுதாய வாக்குகள் பாஜக வுக்கே விழுந்திருப்பது உறுதியாகி உள்ளது. இதற்கு பாஜக தலைமை யிலான மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகளும், நல்ல திட்டங்களும் காரணமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. பிரதமர் மோடி கொண்டு வந்து அமல்படுத்திய அனைத்து வீடுகளுக்குமான மின்சார இணைப்பு, சமையல் எரிவாயு, தூய்மை இந்தியா மற்றும் வீடுகட்டும் திட்டங்களால் உ.பி.யின் கிராமப்புற மக்களுக்கு அதிக பலன் கிடைத்துள்ளது. குறிப்பாக உ.பி.யில் நக்சலைட்டுகள் நடமாட் டத்தால் பாதிக்கப்பட்ட மிர்சாபூர், சோன்பத்ரா, சண்டவுலி ஆகியவை உள்ளிட்ட பல மாவட்டங்களின் கிராமப்புற மக்கள் பாஜகவிற்கே வாக்களித்துள்ளனர்.

மேலும், வங்கி களிடம் இருந்து நேரடியாக மக்க ளுக்கு சென்ற மானியத்தொகை திட்டத்திலும் நல்ல பலன் கிடைத் தது. நகரவாசிகளும் சேர்ந்து அனுப வித்து வரும் இந்த திட்டத்தில் குறிப்பிட்ட மதத்தினர் அல்லது சமூகத்தினருக்கு என பலனை நிறுத்தி வைக்க முடியாது. எனவே, சமூக அடிப்படையில் எந்த வேட் பாளரையும் அவர்கள் தேர்ந் தெடுக்கவில்லை என்பது உ.பி. கட்சிகளுக்கு கிடைத்த வாக்கு சதவிகிதங்களில் வெளிச்சமாகி உள்ளது.

2019 மக்களவை முடிவுகளில் வெளியான வாக்கு சதவிகிதங்களின்படி, பாஜக 49.51, காங்கிரஸ் 6.25, பிஎஸ்பி 19.27, எஸ்பி 18.06, ஆர்எல்டி 1.66 மற்றும் இதர கட்சிகளுக்கு அதைவிடக் குறைவான சதவிகிதமும் கிடைத் துள்ளன. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தவிர மற்ற கட்சிகளுக்கு இந்தமுறையை விட அதிக சதவிகித வாக்குகள் கிடைத்திருந்தன.. இத்துடன், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பம் ஒன்றுக்கு மாதம் ரூ.12,000 வருமானத்திற்கு வழிவகுப்பதாக அதன் தலைவர் ராகுல் காந்தி அறிவித்த ‘நியாய்’ திட்டம் உ.பி.வாசிகள் இடையே எடுபடாமல் போய் இருப்பதும் நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்