தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னரே 2000 கிலோ இனிப்பு தயார் செய்ய ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்: மும்பையில் ருசிகரம்

By ஏஎன்ஐ

தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னரே 2000 கிலோ இனிப்பு தயார் செய்ய பாஜக வேட்பாளர் ஒருவர் ஆர்டர் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வடக்கு மக்களவை தேர்தல் பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டிதான் இவ்வாறு செய்துள்ளார்.

தேர்தல் வெற்றியைக் கொண்டாட இப்போதே அவர் 2000 கிலோ இனிப்பு தயார் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார்.

போரிவல்லி பகுதியில் உள்ள பிரபல இனிப்பகத்தில் 2000 கிலோ இனிப்பு வகைகள் படு ஜோராக தயாராகி வருகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவித்துள்ள நிலையில் பாஜகவினர் கடந்த ஞாயிறு மாலை முதலே உற்சாகத்தில் இருக்கின்றனர்.

தலைநகர் டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வடக்கு மக்களவை தேர்தல் பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டி தேர்தல் வெற்றியைக் கொண்டாட இப்போதே 2000 கிலோ இனிப்பு தயார் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார்.

இதில் இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இனிப்பை தயார் செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிரதமர் மோடி முகமூடி அணிந்து இனிப்பு வகைகளைத் தயார் செய்கின்றனர்.

 

 

 

இதற்கிடையில், மக்களைத் தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் (மே 23) வெளியாகும் நிலையில், மத்தியில் பாஜக அல்லாத ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்க 21 எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில்  ஆலோசனை நடத்துகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவான வாக்குகளையும் வாக்கு ஒப்புகை சீட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

32 mins ago

வாழ்வியல்

23 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

58 mins ago

சினிமா

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்