2-வது முறையாக குஜராத்தில் 26 தொகுதிகளையும் கைப்பற்றும் பாஜக: அமித் ஷா 5 லட்சம் வாக்குகள் முன்னிலை

By பிடிஐ

அமித் ஷா, பிரதமர் மோடியின்  கோட்டை எனக் கூறப்படும் குஜராத்தில் இந்த முறையும் 26 மக்களவைத் தொகுதிகளையும் 2-வது முறையாகக் கைப்பற்றுகிறது பாஜக.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றிய நிலையில், 2-வது முறையாகவும் 26 இடங்களையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜகவும், காங்கிரஸ் கட்சிக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டும், அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை நோக்கியுள்ளது.

காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவேடாவைக் காட்டிலும் 5 லட்சம் வாக்குகள் முன்னிலையுடன் உள்ளார்.

இதேபோல பாஜக வேட்பாளர் மன்சுக் வசாவாவின் தொகுதி உட்பட, தாஹோத் தொகுதி, அம்ரேலி தொகுதி, அகமதபாத் மேற்கு, அகமதாபாத் கிழக்கு, பர்தோலி, பாவா நகர், சோட்டா உதய்பூர், ராஜ்கோட், வதோதரா, ராஜ்கோட், பாஹ்ருச், வல்சத்,  சூரத் ஆகிய அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

32 mins ago

வாழ்வியல்

56 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

30 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

மேலும்