என்.டி.திவாரி மகன் ரோஹித் திவாரி தலையணையால் அமுக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம்: டெல்லி போலீஸ் தரப்பு சந்தேகம்

By செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் உ.பி. முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் திவாரியின் மரணம் இயற்கையானதல்ல, அவர் கொல்லப்பட்டிருக்கலாம், அதாவது தலையணையால் முகத்தில் அமுக்கி அவரை கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பு கூறியுள்ளது.

 

ரோஹித் திவாரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இயற்கை மரணம் அல்ல என்று கூறப்பட்டதையடுத்து இது கொலையாக இருக்கலாம் என்ற கோணம் எழுந்துள்ளது. வழக்கும் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டது.

 

செவ்வாய் மதியம் ரோஹித் மூக்கில் ரத்தம் வழிய கிடந்தார். அதன் பிறகு அவசரம் அவசரமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை அறிவித்தது.

 

கிரைம் பிராஞ்ச் போலீஸ் அதிகாரிகள் இன்று மதியம் ரோஹித் திவாரி இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினரை விசாரித்தனர். ரோஹித்தின் மனைவி அபூர்வா தற்போது டெல்லியில் இல்லை. தடயவியல் நிபுணர்களும் ரோஹித் வீட்டை ஆராய்ந்தனர்.

 

7 சிசிடிவி கேமராக்கள் உள்ளன, இதில் 2 வேலை செய்யவில்லை. ஏப்ரல் 12ம் தேதி ரோஹித் திவாரி உத்தராகண்ட் சென்று வாக்களித்து விட்டு ஏப்ரல் 15ம் தேதி டெல்லி திரும்பியுள்ளார்.  அவர் மதுபான போதையில் சுவற்றைக் கைதாங்கலாகப் பிடித்து நடந்து சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இதற்கு அடுத்த நாள் ரோஹித்தின் தாயார் உஜ்வாலா திவாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது ரோஹித் மூக்கில் ரத்தம் வழிய மயக்கமானதாக அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே அவர் ஆம்புலன்ஸுடன் வீட்டுக்கு வந்து ரோஹித்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கெனவே இறந்ததாக மருத்துவமனை அறிவித்தது.

 

தொலைபேசி அழைப்பு தாயாருக்கு வந்த போது வீட்டில் ரோஹித் மனைவி அபூர்வா, அவரது உறவினர் சித்தார்த், வீட்டுப் பணியாளர்கள் வீட்டில்தான் இருந்துள்ளனர் என்று டெல்லி போலீஸ் கூறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்