2ஜி, காமன்வெல்த், ஹெலிகாப்டர் என ஐ.மு. கூட்டணி ஆட்சியில் ஊழல்மயம்: பிரதமர் நரேந்திர மோடி சரமாரி குற்றச்சாட்டு

By பிடிஐ

‘டிவி9 பாரத்வர்ஷ்’ என்ற இந்தி சேனல் நேற்று தொடங்கி வைக் கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, காமன்வெல்த் விளை யாட்டு போட்டி, போபர்ஸ் ஹோவிட் சர், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் என எதிலும் ஊழலைத்தான் கொடுத்தது. பாஜக தலைமையிலான ஆட்சியில் எந்த செயலும் வெளிப்படையாகவே நடத்தப்பட்டன. ஐமுகூ தலைவர் கள் ஊழலில்தான் ஈடுபட்டனர். நாட்டு நலனை விட தங்கள் சொந்த நலனையே அவர்கள் பெரிதாக நினைத்தனர்.

உளவு செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணையை உருவாக்கும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது. ஆனால், அந்த ஏவுகணையை சோதித்து பார்க்கும் அரசியல் துணிச்சல் முந்தையஅரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால்,அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தனர்.

தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கு எதிர்க்கட்சியினர் ஆதாரம் கேட்கின்றனர். ஆதாரம் ஏன் கேட்கிறார்கள்? பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஏன் பேசுகிறார்கள்? தேசப் பாதுகாப்பு விஷயத்தில் உடனடியாக முடிவெடுக்கும் அரசியல் துணிச்சல் எனது தலைமையிலான அரசுக்கு உண்டு. தேசிய நலன் தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்க தாமதப்படுத்துவது கிரிமினல் அலட்சியமாகும்.

கறுப்பு பண விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அமைப்பதை முந்தைய அரசு தாமதப்படுத்தியது. ஆனால், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஊழல் குறித்து விசாரணை நடத்தசிறப்பு குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர் (ப.சிதம்பரம்), தான் மிகச்சிறந்த அறிவாளி என்று நினைக்கிறார். ‘செயற்கைகோள் அழிப்பு ஏவுகணை (ஏசாட்)’ சோதனையை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். அந்தஅளவுகோலின்படி பார்த்தால்,கடந்த 1974-ம் ஆண்டு போக்ரானில்நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையை ஏன் ரகசியமாக வைக்கவில்லை? ஊழல் வழக்கில் நீதி மன்றங்களுக்கு சென்று வருவதை ரகசியமாக வைத்திருக்க வேண் டும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

முன்பெல்லாம் பாகிஸ்தானின் பொய் பிரச்சாரங்கள், சர்வதேச அமைப்புகளில் எதிரொலிக்கும். இப்போது இந்தியாவின் கருத்தைகவனிக்கிறார்கள். நமது கருத்துக்கு சர்வதேச அமைப்புகளில் முக்கியத்துவம் கிடைக்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்