காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள ‘நியாய்’ திட்டம்: பொருளாதாரத்தை மீட்டெடுக்கும், வேலைவாய்ப்பை உருவாக்கும் - குஜராத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம்

By பிடிஐ

‘‘காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள ‘நியாய்’திட்டம் நாட்டின் பொருளா தாரத்தை மீட்டெடுக்கும், வேலை வாய்ப்புகளை உருவாக் கும்’’ என்று அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் பிரச்சாரம் செய்தார்.

குஜராத் மாநிலம் பஜிபுரா பகுதியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் துஷார் சவுத்ரியை ஆதரித்து ராகுல் காந்தி பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அந்தப் பாதிப்பில் இருந்து காங்கிரஸ் கட்சியின் ‘நியாய்’ திட்டம் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும், நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

‘நியாய்’ திட்டத்தின் கீழ் ஏழைமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72ஆயிரம் வழங்குவோம் என்றுநாங்கள் உறுதி அளித்திருக் கிறோம். காங்கிரஸ் கட்சியில் உள்ள பொருளாதார நிபுணர்களுடன் நான் தீவிர ஆலோசனை நடத்தினேன். ஏழைகளுக்கு எவ்வளவு பணம் தரமுடியும் என்று கேட்டேன். அவர்கள் நன்கு ஆய்வு செய்த பிறகு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்க முடியும் என்று கூறினர். அதன் பிறகுதான் ‘நியாய்’ திட்டத்தை காங்கிரஸ் அறிவித்தது. பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு ஏழைகளுக்கு ரூ.15 லட்சம் தருவதாக பொய் வாக்குறுதி அளித்தார். ஆனால், நியாய் திட்டத்தின் கீழ் கணக்கிடப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ரூ.3.60 லட்சத்தை நாங்கள் தருவோம்.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்ட பிறகு பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. மக்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்திவிட்டனர். இதனால் நாட்டில் உள்ள கம்பெனிகள் உற்பத்தியை நிறுத்திவிட்டு மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது.

எனினும், எங்களுடைய நியாய் திட்டம் பொருளாதாரத்தை மறு சீரமைக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும். மக்கள் பொருட்கள் வாங்க உதவும், நமது கம்பெனிகள் மீண்டும் திறக்கும். இவ்வாறு ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.

குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 மக்களவைத் தொகுதிக்கும் வரும் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

45 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்