யூபிஎஸ்சியில் தேர்வான முதல் கேரள பழங்குடிப் பெண்: வயநாட்டைச் சேர்ந்தவருக்கு ராகுல் காந்தி வாழ்த்து

By செய்திப்பிரிவு

யூபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்ற முதல் கேரள பழங்குடிப் பெண்ணும் வயநாட்டைச் சேர்ந்தவருமான ஸ்ரீதன்யா சுரேஷுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் கேரளாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் முதல் முறையாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். 22 வயதான ஸ்ரீதன்யா சுரேஷ், இந்திய அளவில் 410-வது இடத்தைப் பிடித்துள்ளார். வயநாட்டைச் சேர்ந்த ஸ்ரீதன்யாவை ராகுல் காந்தி வாழ்த்தியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரின் கனவை நனவாக்கியுள்ளது. அவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எதிர்காலத்தில் சிறந்த வெற்றியை அடைய வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தொடர்ந்து 3 முறையாக எம்.பி.யாக உள்ளார் ராகுல்.  4-வது முறையாக அமேதி தொகுதியில் அவர் போட்டியிடும் அதேநேரத்தில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

19 mins ago

சினிமா

22 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

20 mins ago

சினிமா

38 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

32 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

46 mins ago

வலைஞர் பக்கம்

50 mins ago

சினிமா

55 mins ago

மேலும்