தெலங்கானா, உ.பி., கேரளா, மேற்கு வங்கம்; 4வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக: பெங்காலில் முஸ்லிம் பெண் வேட்பாளர்

By ஐஏஎன்எஸ்

மக்களவைத் தேர்தலில் தெலங்கானா, கேரளா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் உள்ள 11 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் நான்காவது பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒரு முஸ்லிம் பெண் வேட்பாளருக்கும் சீட் தரப்பட்டுள்ளது.

பாஜக இன்று வெளியிட்டுள்ள நான்காவது வேட்பாளர் பட்டியலில் மேற்கு வங்கத்தின் ஜான்கிபூர் தொகுதியில் மஃபூஸா காதுன் என்ற முஸ்லிம் பெண் வேட்பாளரை நிறுத்துவதை உறுதிசெய்துள்ளது. இவர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்தவர்.

சட்டமன்ற தேர்தலில் பெண்வேட்பாளரை பாஜக களமிறக்கியபோதும், நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அக்கட்சி வரலாற்றிலேயே நீண்ட காலத்திற்குப் பிறகு முதன்முதலாக பாஜக ஒரு முஸ்லிம் பெண் வேட்பாளரை களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரோடு சேர்த்து தெலங்கானாவில் ஆறு வேட்பாளர்களும், உத்தரப் பிரதேசத்தில் மூன்று பேரும் கேரளாவில் ஒருவரும் என இம்முறை 11 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கேரளாவில் பந்தனம்திட்டா தொகுதியில் பாஜக சார்பாக கே.சுரேந்திரனும், உத்தரப் பிரதேசத்தின் காய்ரானா தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது. எனினும் இம்முறையும் இத்தொகுதியில் பாஜக பிரதீப் சவுத்திரி களமிறக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, உத்தரப் பிரதேசத்தில் யஷ்வந்த் நாகினா நாடாளுமன்றத் தொகுதியிலும், போலோ சிங் புலாந்த்ஷாஹர் நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பாஜக மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை மார்ச் 21 அன்றுமுதல் வெளியிடத் தொடங்கியது. முதல்கட்டமாக  184 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலையும் இரண்டாவது கட்டமாக 36 தொகுதிகளுக்கான பட்டியலையும் மூன்றாவது கட்டமாக 13 தொகுதிகளுக்கான பட்டியலையும் நான்காவது கட்டமாக 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் இதுவரை வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

வலைஞர் பக்கம்

21 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்