அரசியல் லாபத்துக்காக காவலாளி கோஷம்: மோடி மீது கபில் சிபல் குற்றச்சாட்டு

By பிடிஐ

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: கடந்த மக்களவை தேர்தலில் நான் தேநீர் கடையில் வேலை பார்த்தவன் (சாய்வாலா) என்று நரேந்திர மோடி கூறி பிரச்சாரம் செய்தார்.

இப்போது காவலாளி (சவுகிதார்) பெயரைக் கூறி வருகிறார் மோடி. அரசியல் லாபத்துக்காக அடுத்த முறை வேறு யார் பெயரையாவது கூறி வாக்குக் கேட்பார் அவர். பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதை அரசியலாக்கி வருகிறார் பிரதமர் மோடி.

பொதுமக்கள் மத்தியில் இந்தத் தாக்குதல் விவரங்களைக் கூறி அதை அரசியலாக்கி வருகிறது பாஜக. அப்படியானால் எதிரி நாட்டினர் குர்தாஸ்பூர், பதன்கோட், உரி, பாரமுல்லா, புல்வாமாவில் தாக்குதல்களை நடத்தியபோது இந்த காவலாளி எங்கிருந்தார்? சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை. நாட்டு மக்களின் விவசாயம், கல்வி, சுகாதாரம், வறுமை, கடன் பிரச்சினை போன்ற விஷயங்கள் குறித்து பாஜக அரசு கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

20 mins ago

இந்தியா

22 mins ago

சினிமா

35 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்