அமேதியில் ராணுவ துப்பாக்கித் தொழிற்சாலை: மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

By பிடிஐ

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற தொகுதியான அமேதியில் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அமேதிக்கு நாளை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி அமேதியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலும் மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்.

அமேதியில் உள்ள கவ்ஹாரில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய ரஷ்ய ரைபிள்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

இந்திய-ரஷ்ய ரைஃபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பது இந்தியாவின் ராணுவ தளவாட தொழிற்சாலையும் ரஷ்ய நிறுவனமும் இணைந்த ஒரு கூட்டு முயற்சியாகும்.

இந்நிகழ்ச்சி தவிர, பிரதமர் மின் உற்பத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் உற்பத்தி துறைகள் சார்ந்தும் பல வளர்ச்சித் திட்டங்களை அமேதி மற்றும் அமேதி வட்டாரப் பகுதிகளில் தொடங்கிவைக்கிறார். இவை அமேதி பிராந்தியத்திற்கு நேரடியான பயனளிக்கும் திட்டங்கள் ஆகும்.

பின்னர் மோடி, கவ்ஹாரில் நாளை மாலை நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவார்.

இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

14 mins ago

வணிகம்

26 mins ago

இந்தியா

51 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்