தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும்- ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் குவிந்த காஷ்மீர் இளைஞர்கள்

By செய்திப்பிரிவு

புல்வாமா தாக்குதலை அடுத்து நடைபெற்ற பாரமுல்லா ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் ஏராளமான காஷ்மீர் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

புல்வாமாவில் கடந்த பிப்.14-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. தீவிரவாதிகளுக்கு தகுந்த  பதிலடி கொடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களில் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தலும், துன்புறுத்தலும் வருவதாக உள்துறை அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் ஏராளமான மாணவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

மாறிக்கொண்டே இருக்கும் அரசாலும் காஷ்மீரின் நிலையற்ற தன்மையாலும் அதிகம் பாதிக்கப்படுவது காஷ்மீரிகளே. எனினும் இந்திய ராணுவத்தில் சேரப் பலர் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பாரமுல்லா பகுதியில் 111 இடங்களுக்கான ராணுவ வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் ஏராளமான காஷ்மீர் இளைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் கலந்துகொண்ட இளைஞர் பிலால் அஹமது பேசும்போது, ''ராணுவத்தில் இணைவதன் மூலம் எங்களின் குடும்பத்தைக் காப்பாற்றும் வாய்ப்பு கிடைக்கும். தேசத்துக்குச் சேவை செய்யவும் முடியும். இதைத் தவிர வேறென்ன வேண்டும்?'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

2 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

36 mins ago

விளையாட்டு

28 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்