ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் ரஃபேல் போர் விமானம் சாகசம்

By இரா.வினோத்

பெங்களூருவில் நேற்று தொடங்கிய ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியில் ரஃபேல் போர் விமானம் சாகசத்தில் ஈடுபட்டது பார்வையாளர்களிடையே உற் சாகத்தை ஏற்படுத்தியது.

பாதுகாப்புத் துறை மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் 'ஏரோ இந்தியா - 2019' சர்வதேச விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச் சர் நிர்மலா சீதாராமன் நேற்று பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமான படை தளத்தில் தொடங்கி வைத்தார். இதில் கர்நாடக முதல்வர் குமாரசாமி, மத்திய அமைச்சர் சதா னந்த கவுடா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கண்காட்சியில் 22 நாடுகளின் 61 அதிவேக போர் விமானங்களும், 165 கண்காட்சி மையங்கள் உட்பட 365 நிறுவனங் களின் மையங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் விமானவியல் தொழில்நுட்பம் தொடர்பான கருவி கள், புதிய கண்டுபிடிப்புகள், முப்படைக்கும் தேவையான விமா னங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், ரேடார்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ''மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் விமான உற்பத்தியை அதிகரிக் கும் பணியில் மத்திய அரசு தீவிர மாக ஈடுபட்டுள்ளது. சர்வதேச தரம்வாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் வகையில் பாதுகாப் புத் துறை சார்பில் 150 ஒப்பந்தங் கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, விண்வெளி மற்றும் இதர பாதுகாப்பு துறைகளில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட் டாளர்களுக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது'' என்றார்.

இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும், ஏரோ இந்தியா விமான கண்காட்சி ஒத் திகையின்போது உயிரிழந்த விமா னிக்கும் மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது. இதையடுத்து ருத்ரா, சாரங்நேத்ரா, சகோய், ஹெச்டிடி -40, யூஎஸ்எப் - 17 உள்ளிட்ட விமானங்களின் அதிவேக வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அண்மைக்காலமாக தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ரஃபேல் விமானம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வானில் சீறி பாய்ந்தது. பிற விமா னங்களை ஒப்பிட்டு பார்க்கை யில், ரஃபேல் விமானத்தின் அதி வேக பாய்ச்சல் பார்வையாளர் களிடையே உற்சாகத்தை ஏற்படுத் தியது. இதுதவிர, அதிவேக சூர்ய கிரண் போர் விமானங்கள் மூவர் ணக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் வானில் வண்ணப் புகையை கக்கியவாறு நிகழ்த் திய வர்ணஜாலத்தால் பார்வை யாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்