‘‘நூலகத்தால் யாருக்கு பயன்?’’ - மோடியை கிண்டல் செய்த ட்ரம்ப்க்கு இந்தியா பதிலடி

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் இந்தியா அமைத்துக் கொடுத்த நூலகத்தால் யாருக்கு பயன் என பிரதமர் மோடியை கிண்டல் செய்த ட்ரம்புக்கு இந்தியா சார்பில் பதில் தரப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று தனது மாளிகையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது ட்ரம்ப் கூறுகையில் “இந்தியப் பிரதமர் மோடி அடிக்கடி என்னிடம், ஆப்கானிஸ்தானில் நாங்கள் நூலகம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம் என்கிறார். உங்களுக்குத் தெரியுமா, அந்த நூலகம் எங்கே இருக்கிறது?. போர் நடந்து கொண்டிருக்கும் அந்த நாட்டில் நூலகம் அமைத்து யாருக்கு என்ன பயன். அந்த நூலகத்தில் அமர்ந்து 5 மணிநேரம் செலவு செய்திருப்பார்களா?

பிரதமர் மோடி அவ்வாறு கூறியதற்கு, ஓ அப்படியா நூலகம் அமைத்துக் கொடுத்தமைக்கு நன்றி என்று கூறிவிட்டேன். ஆப்கானிஸ்தானில்  பிரதமர் மோடி அமைத்துக் கொடுத்த நூலகத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரியாது’’ எனக் கூறியிருந்தார்.

இதற்கு இந்தியா சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘‘போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் வளர்ச்சி பணிகளால் மட்டுமே மாற்றங்களை கொண்டு வர முடியும். தீவிரவாதத்தை ஒழிப்பதுடன் மட்டும் உலக நாடுகளின் பணிகள் முடிந்து விடவில்லை. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான பல பணிகளை இந்தியா செய்து வருகிறது. பள்ளிக்கூடம், மாணவர்களுக்கு உதவித் தொகை என பல உதவிகளை இந்தியா செய்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்