மதிய உணவுத் திட்டம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்காத 6 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் அபராதம்

By பிடிஐ

மதிய உணவுத் திட்டம் தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்காத ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா, மேகாலயா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு, தலா ரூ. 1 லட்சத்தை அபராதமாக உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. மேலும் டெல்லி அரசுக்கு ரூ.2 லட்சம் அபராதத்தை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

மதிய உணவுத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும், உணவு தானியங்கள் உரிய முறையில் பள்ளிகளுக்கு சென்று சேர்வதில்லை என்றும் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை அரசு சாரா அமைப்பான அந்தர்ராஷ்டிரிய மானவ் அதிகார் நிக்ரானி பரிஷத் தாக்கல் செய்திருந்தது.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்த விரிவான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டிருந் தது.

அந்த விவரங்களின் அடிப் படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறி யிருந்தது

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோகுர், தீபக் குப்தா, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா, மேகாலயா, ஜம்மு காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்கள் தவிர அனைத்து மாநிலங்களும் அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தன.

இதைத் தொடர்ந்து நீதிபதி கள் கூறும்போது, “மதிய உணவுத் திட்டத்தை சில மாநிலங்கள் தீவிர மாக எடுத்துக்கொள்ளவில்லை. இது கண்டிக்கத்தக்கது. 5 மாநிலங் களுக்கு ரூ.1 லட்சமும், டெல்லி மாநிலத்துக்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அறிக்கையை அடுத்த 4 வாரங் களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அபராதமாக பெறப் படும் தொகை சிறார் நலனுக் காக பயன்படுத்தப்படவேண்டும்” என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்