முஸ்லிம் பெண்ணை மணந்ததால் சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வராக எதிர்ப்பு

By ஆர்.ஷபிமுன்னா

ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், அதன் முடிவுகள் டிசம்பர் 11-ல் வெளியாக உள்ளன.

கருத்துக்கணிப்புகளின்படி ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வராக பதவி வகிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில், ராஜஸ்தானின் முன் னாள் முதல்வர் அசோக் கெலாட்டை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் முன்னிறுத்தவில்லை. எனினும், அப்பதவியை எதிர்பார்த்து காங்கிரஸின் மூத்த தலைவரான அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் போட்டியிட்டார்.

இதே முதல்வர் பதவி எதிர் பார்ப்புடன் ராகுலுக்கு நெருக்க மான தலைவர் சச்சின் பைலட் டும், டோங்க் தொகுதியில் போட்டி யிட்டிருந்தார். மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் பைலட்டின் மகனான இவர், முதன்முறையாக சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனால், சச்சினுக்கு முதல்வராகும் வாய்ப்பு மிகவும் குறைவு எனக் கருதப்படுகிறது.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

குஜ்ஜர் சமூகத்தைச் சேர்ந்த சச்சின் பைலட்டை ராஜஸ்தான் முதல்வராக்க ராகுல் காந்தியும், கெலாட்டை அப்பதவியில் அமர வைக்க சோனியா காந்தியும் விரும்புகின்றனர். ஆனால், முஸ்லிம் பெண்ணை மணந்ததால் சச்சினுக்கு ராஜஸ்தானில் பரவ லாக எதிர்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதையும் மீறி, சச்சினை முதல்வராக்கினால் அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு படுதோல்வி கிடைக்கும் என்ற அச்சமும் உள்ள தால் கெலாட்டுக்கே வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்தனர்.

சச்சின் பைலட் கடந்த ஜனவரி 15, 2004-ல் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகள் சாரா அப்துல்லாவை மணந்தார். இவர்களுக்கு ஆரான் மற்றும் வெஹான் என இருமகன்கள் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

ஆன்மிகம்

13 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

மேலும்