ஒடிசா முதல்வருடன் அமர்ந்து ஹாக்கி போட்டியை ரசித்த முன்னாள் மாவோயிஸ்ட்கள்

By செய்திப்பிரிவு

ஒடிசா மாநிலத்தில் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடையும் மாவோ யிஸ்டுகளின் மறுவாழ்வுக்காக கடந்த 2006-ம் ஆண்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் படி பலர் சரணடைந்து அரசு திட் டத்தின் மூலம் பலனடைந்துள் ளனர். அதுபோல் சமீபத்தில் 16 பெண் மாவோயிஸ்டுகள் உட்பட 30 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஹாக்கி உலகக் கோப்பை காலிறுதி பேட்டி இரு தினங்களுக்கு முன்பு நடைபெற் றது. இதில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட் டியை முதல்வர் நவீன் பட்நாயக் குடன் பார்த்து ரசிக்க வேண்டும் என்று சரணடைந்த மாவோயிஸ் டுகள் வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்கள் ஆசையை நிறை வேற்ற மால்கன்கிரி போலீஸ் எஸ்.பி., மற்ற அரசு துறை அதிகாரி களின் ஒத்துழைப்புடன் ஹாக்கி போட்டியைக் காண ஏற்பாடு செய்தார். ஹாக்கி போட்டியை காண கலிங்கா மைதானத்துக்கு முன்னாள் மாவோயிஸ்டுகள் வந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். பின்னர் முதல்வர் நவீன் பட்நாயக்கின் அருகில் அமர்ந்து அனைவரும் ஹாக்கி போட்டியை ரசித்துப் பார்த்தனர்.

இந்த வாய்ப்பை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்த அவர்கள், கூறும்போது ‘‘வாழ்க் கையில் இது மறக்க முடியாத அனுபவம். நாங்களும் இந்த சமூகத் தில் ஓர் அங்கம் என்று இப்போது உணர்கிறோம்.’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்