‘இது கோயில்... மசூதி அல்ல’ - ராகுல் காந்திக்கு அறிவுறுத்திய தலைமை அர்ச்சகர்; யோகி ஆதித்யநாத் கிண்டல்

By ஏஎன்ஐ

மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோயில் கோயிலாகச் சென்றதையடுத்து அவரைக்  குறிவைத்துத் தாக்கிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘ராகுல் காந்திக்கு எந்த இடத்தில் எப்படி உட்கார வேண்டும் என்பது கூட தெரியவில்லை’ என்று கிண்டல் செய்துள்ளார்.

இது குறித்து ஆதித்யநாத்தை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் யோகி ஆதித்யநாத், “ராகுல் காந்தி குஜராத்தில் பல கோயில்களுக்குச் சென்றுள்ளார். ஆனால் ஒரு கோயிலில் அவர் மண்டியிட்டு அமர்ந்தார், அப்போது குருக்கள் ராகுல் காந்தியிடம் ‘இது கோயில்.. மசூதி இல்லை’ என்று அறிவுறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று கூறியதோடு, எந்தக் கோயிலில் எப்படி உட்காருவது என்று கூட அவருக்குத் தெரியவில்லை என்று கிண்டலடித்துள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி, காங்கிரஸ் மீது தாக்குதல் விமர்சனம் தொடுத்த போது, மத்தியப் பிரதேசத்தில் பசுவை வணங்கும் காங்கிரசார், கேரளாவில் தன் கட்சிக்காரர்கள் பசு இறைச்சியை உண்பதை ஆராதிக்கின்றனர், இவ்வாறு மக்களை காங்கிரஸார் குழப்புகின்றனர் என்று பேசினார்.

வாக்குகளுக்காக காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மத உணர்வுகளைத் தூண்டுமாறு செயல்படுகின்றனர் என்று பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் ராகுல் காந்திக்கு எந்தக் கோயிலில் எப்படி உட்கார வேண்டும் என்றே தெரியவில்லை என்று யோகி ஆதித்யநாத் கிண்டலடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்