மும்பை தாக்குதல் 10-ம் ஆண்டு நினைவு தினம்

By செய்திப்பிரிவு

மும்பை: கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி கடல் மார்க்கமாக மும்பைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 166 பேரை சுட்டுக்கொன்றனர். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு கடந்த 2012 நம்பவரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அந்த தாக்குதலின் 10-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மும்பை தாக்குதலில் உயிரிழந்தோர் நினைவாக மும்பையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அமெரிக்கா ரூ.36 கோடி பரிசு அறிவிப்பு

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ நேற்று கூறியதாவது:

பத்து ஆண்டுகளான பிறகும் தாக்குதலை திட்டமிட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.36 கோடி பரிசு வழங்கப்படும். மும்பை தாக்குதலில் 6 அமெரிக்கர்களும் பலியாகினர்.

அவர்கள் உட்பட உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

45 mins ago

ஜோதிடம்

55 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்