கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு: பேராயர் பிராங்கோ ஜாமீன் மனு கேரள உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

By செய்திப்பிரிவு

கேரளாவில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல்லின் ஜாமீன் கோரிக்கையை கேரள உயர் நீதிமன்றம் நேற்று நிரா கரித்தது.

ரோமன் கத்தோலிக்க திருச் சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்கு பிறகு கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். பிராங்கோ தற்போது கோட்டயம் மாவட்டம் பலா கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இந்நிலையில் அவர் தனக்கு ஜாமீன் கோரி கேரள உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ராஜா விஜய ராகவன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. குற்றவியல் நடைமு றைச் சட்டப் பிரிவு 164-ன் கீழ் மாஜிஸ் திரேட் முன்னிலையில் சக கன்னி யாஸ்திரிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டியுள்ளது” எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜா விஜய ராகவன், பிராங்கோவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

8 mins ago

விளையாட்டு

57 mins ago

இந்தியா

32 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்