திருப்பதி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் விழா: ஹனுமன் வாகனத்தில் மலையப்பர் பவனி

By செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயி லில் தற்போது நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை, உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, தங்க ஹனுமன் வாகனத்தில் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் மாடவீதிகள் தோறும் திரளான பக்தர்கள் காத்திருந்து உற்சவரை வழிபட்டனர்.

வாகன சேவையில் நேற்று தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனக் குழுவினர் நடனமாடினர். இது பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனை தொடர்ந்து மாலை உற்சவ மூர்த்திகளான தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் புஷ்பக விமானத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நவராத்திரி பிரம்மோற்சவத்தில் தேரோட்டம் இல்லாததால், உற்சவர் புஷ்பக விமானத்தில் பவனி வருவது ஐதீகம். இதனை தொடர்ந்து நேற்றிரவு, கஜ (யானை) வாகனத்தில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தரிசனத்திற்கு 20 மணி நேரம்

ஏழுமலையானை தரிசனம் செய்ய 20 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர். நேற்று வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளிலும் பக்தர் கள் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். நேற்று காலை 7 மணியி லிருந்து சர்வ, திவ்ய தரிசனம் மூலம் பெருமாளை தரிசித்தனர். இதில், திவ்ய தரிசனம் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசனம் செய்த பக்தர்கள் மட்டும் 3 மணி நேரத்தில் சுவாமியை தரிசித்தனர். ஆனால், சர்வ தரிசனத்தில் சென்ற பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து ஏழு மலையானை தரிசித்தனர். நேற்று முன்தினம் கருட சேவையன்று மட்டும் ரூ. 2.93 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

மேலும்